
திருமண அழைப்பிதழ் ❤️
இந்த மகிழ்ச்சிகரமான தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வது எங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. எங்கள் காதல் இணையும் இந்த நாள் ஒரு அரிய வரப்பிரசாதம், அதை நம் உறவுகளோடும் நண்பர்களோடும் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
திருமணம் ஒரு சாதாரண விழா அல்ல – இரு உறவுகளின் சந்திப்பாகும்! நாங்கள் இருவரும் கிறிஸ்தவ ⛪ மற்றும் சைவ மரபுகளின் படி 🕉️ திருமணம் செய்து கொள்ள உள்ளோம். இரண்டு அழகிய சமய கலாச்சாரங்களையும் கலந்து இணைக்கும் ஒன்றே நம் அன்பு
இந்த மறக்கமுடியாத தருணங்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம்!
நம் வாழ்க்கையின் இந்த இனிய புதிய அத்தியாயத்தை உங்கள் அனைவருடனும் கொண்டாட நாங்கள் காத்திருக்கிறோம்.
உங்கள் வசதிக்காக, விழாவைப் பற்றிய அனைத்து தகவல்களையும் சேர்த்திருக்கும் இந்த வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். மேலே உள்ள மெனுக்களை (Menu) அழுத்தி , நிகழ்வைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.
முக்கிய தகவல்! 🚨
உங்கள் வருகையை உறுதிப்படுத்த, தயவுசெய்து 15 ஆனி 2025 க்குள் பதிலளிக்கவும். அதற்கு, ஒவ்வொரு பக்கத்திலும் காணக்கூடிய சிவப்பு "பதில் அளிக்கவும்" பொத்தானை (Button) 🔴👇 அழுத்தி உங்கள் பதிவுகளை செய்யவும்.
ஒரே முறை மட்டும் பதிவு செய்யவும்! பலமுறை
பதிவு செய்தால் கணக்கில் குழப்பம் ஏற்படும். ஏதேனும் மாற்றம் ஏற்படின், எங்கள்
தொடர்பு படிவத்தின் மூலம் எளிதாக தெரியப்படுத்தலாம். 📧
இந்த இனிய நாளை உங்கள் அனைவருடனும் கொண்டாட உற்சாகமாக எதிர்பார்க்கிறோம்!