
திருமண விபர ங்கள்
தேவாலயத் திருமணம்:
30.08.2025 பி.ப. 1 மணிக்கு
இடம்: St. Bruno Kirche
Akazienweg 16
59494 Soest
கொண்டாட்டம்:
30.08.2025 மாலை 5 மணிக்கு
இடம்: Stadthalle Soest
Dasselwall 1
59494 Soest
ஒரு கிறிஸ்தவ திருமணத்தின் தகவல் மற்றும் செயல்முறை
கிறிஸ்தவ பாரம்பரியத்தில், திருமணம் எனும் சடங்கு கடவுள் மீது அன்பு மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்ப டையில் ஒரு உடன்படிக்கையாக கருதப்படுகிறது.
1. வரவேற்பு மற்றும் நுழைவு
இசையுடன் கூடிய பாடலுடன் விழா தொடங்கும் . பாரம்பரியமாக, மணமகன் பலிபீடத்தில் காத்திருக்கும் போது மணமகள் தனது தந்தையுடன் தேவாலயத்திற்குள் நுழைவார்.


2. பிரார்த்தனை மற்றும் வரவேற்பு வார்த்தைகள்
குருவானவர் அங்கிருப்பவரை வரவேற்று, கடவுளின் பெயரில் கொண்டாட்டத்தைத் தொடங்க ஒரு பிரார்த்தனை செய்வார். திருமண பந்தத்தின் முக்கியத் துவம் வலியுறுத்தப்படுகிறது.
3. வாசகம் மற்றும் பிரசங்கம்
அன்பு மற்றும் விசுவாசத்தை பற்றிய வாசகங்கள் வாசிக்கப்படும். அதனைத்தொடர்ந்து குருவானவர் திருமணப்பந்தத்தின் முக்கியத்துவம் பற்றிய பிரசங்கத்தை வழங்குவர் .


4. திருமண உறுதி மொழிகள்
இங்கு தம்பதியினர் ஒருவருக்கொருவர் அன்பு, மரியாதை மற்றும் உண்மையாக இருக்க விரும்புகிறார்கள் என்பதை கடவுள் மற்றும் சமூகத்தின் முன் உறுதிப்படுத்துவார்கள். இதைத் தொடர்ந்து திருமண உறுதிமொழிகளை பரிமாறி கொள்ளவார்கள்.
5. மோதிர அணிவிப்பு
குருவானவர் மோதிரங்களை ஆசிர்வதித்து தம்பதியினர் மோதிரங்களை ஒருவருக்கொருவர் அணிவிப்பர்.


6. கைப்பிடித்தல்
குருவானவர் தம்பதிகளின் வலது கைகளை இணைத்து ஆசீர்வதிப்பார்.
7. முடிவு பகுதி
தம்பதிகளுக்காக பிரார்த்தனை மற்றும் ஆசிர்வாதத்துடன் திருப்பலி நிறைவடையும். தம்பதிகள் த ேவாலயத்தில் இருந்து ஜோடியாக வெளியேறுவார்கள்.
